Cookies on Plantwise Knowledge Bank

Like most websites we use cookies. This is to ensure that we give you the best experience possible.

Continuing to use www.plantwise.org/KnowledgeBank means you agree to our use of cookies. If you would like to, you can learn more about the cookies we use.

Plantwise Knowledge Bank
  • Knowledge Bank home
  • Change location
Plantwise விவசாயிகளுக்கான தகவல் படிவம்
PDF AddAdd to factsheet booklet

பீடைகளின் இயற்கை எதிரிகளைப் பாதுகாத்தல்

பிரச்சனையை கண்டறிதல்

எமது சூழல்த் தொகுதியானது அயன மண்டலமாக இருப்பதால் உயர் பல்வகைத் தன்மை உள்ளதுடன் அதிகளவான இயற்கை எதிரிகளையூம் கொண்டுள்ளது. இவை மரக்கறிப் பயிர்களில் பீடைகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கை வகிக்கின்றன. இருந்தும் தவறான பீடை நாசினிப் பிரயோகத்தால் இவை அழிக்கப்படுகின்றன. இயற்கை எதிரிகளைப் பாதுகாப்பது செலவூ அற்ற சூழலுக்கு நட்புறவான முறையில் மரக்கறிச் செய்கையில் பீடைகளை முகாமைத்துவம் செய்யூம் சிறந்த முறையாகும.

பின்னணி

இயற்கை வாழிடத்தில் இயற்கை எதிரிகள் தாவரவூண்ணிகளாக உள்ளன. தாவர மகரந்தம் அமுதம் மற்றும் தாவரச் சாறுகளை உண்ணுகின்றன. இது அவற்றின் குடித்தொகைப் பெருக்கத்திற்கு சாதகமாக உள்ளது. விவசாய சூழல்த் தொகுதியில் பீடைகளின் பெருக்கம் உச்ச மட்டத்திற்கு செல்வதை இயற்கை எதிரிகள் தடுக்கின்றன.

மேலாண்மை

முகாமைத்துவ சிபார்சுகள்
  • தேவையற்ற பீடைநாசினிப் பிரயோகத்தை தவிர்த்தல்.
  • வரம்புகள் மற்றும் சூழலிலுள்ள இயற்கைப் பசுமையை குழப்பாது பாதுகாத்தல்.
  • அறுவடையின் பின் மீதிகளை எரிப்பதை தவிர்க்கவூம்.
  • பயிர் மீதிகளை இயற்கை எதிரிகள் உள்ள வயல்களுக்கு அண்மையில் குவித்து விடல்.
  • போதியளவூ சேதனப் பசளையை மண்ணிற்கு இடல்.
  • தனிப்பயிர்ச்செய்கையை தவிர்த்து பல்லினப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல்.

தகவல் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பொருத்தமான நாடு: இலங்கை

ஆசிரியர்கள்: S. S. Weligamage, W. M.D.H. Kulatunga, N. P. Haritha Nimalananda, A. Priyatharsini
Plant Protection Service
தொலைபேசி: 0094 0812388316 மின்னஞ்சல்: senaniweligamage@gmail.com
திருத்தியவர்
Plantwise
தயாரிக்கப்பட்ட இடம் இலங்கை அக்டோபர் 2013