Cookies on Plantwise Knowledge Bank

Like most websites we use cookies. This is to ensure that we give you the best experience possible.

Continuing to use www.plantwise.org/KnowledgeBank means you agree to our use of cookies. If you would like to, you can learn more about the cookies we use.

Plantwise Knowledge Bank
  • Knowledge Bank home
  • Change location
Plantwise விவசாயிகளுக்கான தகவல் படிவம்
PDF AddAdd to factsheet booklet

கரும்பு பஞ்சு அசுவிணி

பிரச்சனையை கண்டறிதல்

கரும்பைத் தாக்கும் இவ்வகைப்பூச்சியின் உடலை சுற்றி வெள்ளை நிற கம்பளி போன்ற போர்வை அமைப்பு காணப்படும்.தரையிலும், இலைகளின் மேல் படிந்துள்ள வெண்ணிற துகள் படிவுகள் பஞ்சு அசுவிணியின் நடமாட்டத்தை உறுதிப்படுத்துகின்றது.பூச்சித்தாக்குதல் தடுக்கப்படாவிட்டால், இவை வேகமாக பரவி 20% வரை கரும்பில் மகசூல் இழப்பு ஏற்படும்.

பின்னணி

இளம்குஞ்சுகளும், முழு வளர்ச்சியடைந்த பூச்சிகளும் கரும்பு இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு சாறை உறிஞ்சி வாழும்.இவை இலைகளை வேகமாக உண்பதோடு, அதிக சர்க்கரையை தேன் போன்ற திரவமாக மாற்றுகின்றது.கரும்பில் கரும்படல பூசண நோய் தோன்றக் காரணமாக அமைகின்றது.பருவ மழை முடிந்தபின் இப்பூச்சிகள் தோன்றி கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். அதிக காற்றின் ஈரப்பதம், மழையற்ற வறட்சியான கால சூழ்நிலை போன்றவை இப்பூச்சிகளுக்கு உகந்த சூழல்களாகும்.இவை காற்றின் மூலமாகவும் பாதிக்கப்பட்ட விதைக் கரணைகள் மூலமாகவும் பரவும் தன்மை கொண்டவை. கரும்பு நடவுபட்டமில்லா தருணங்களில் கட்டைக் கரும்புகளிலும், களைகள் மற்றம் வாழைப்பயிரிலும் இவை உயிர்வாழும்.

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட பயிரின் பாகங்களை அகற்றி எரித்து அழித்து விட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கண்டிப்பாக விதைக் கரணைகளை நடவு செய்ய பயன்படுத்தக் கூடாது.
  • 4 அடி என்ற இடைவெளியில் அகலப்பார் முறையில் கரும்பை நடவு செய்ய வேண்டும். மேலும் தோகை உரித்தலின் மூலமாகவும் நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்க செய்ய வேண்டும்.
  • கட்டைப்பயிர் சாகுபடியை தவிர்க்க வேண்டும்.
  • உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளாக, பஞ்சு அசுவிணியின் இயற்கை எதிரிகளான டிபா ஏபிடிவோரா, மைக்ரோமஸ் க்ரோடஸ், யூபெடா கான்ரேட்டா (1000 புழுக்கள் அல்லது கூட்டுப்புழுக்கள் / ஹெக்), கிரைசோபா (30,000 முழுவளர்ச்சியடைந்த பூச்சிகள் / ஹெக்டேர்) போன்றவைகளை பாதிக்கப்பட்ட வயலில் விடுவிக்க வேண்டும்.
  • பேவேரியா பேசியானா (பயோபவர் அல்லது பீவிசைடு @ 10 மிலி அல்லது 12 கிராம் / லிட்டர் என்ற அளவில்), மெட்டார்சியம் அனிசோப்லியே (பயோமேஜிக் @ 10 மிலி அல்லது 12 கிராம் / லிட்டர் என்ற அளவில்) தெளித்து அசுவிணிகளை கட்டுப்படுத்தலாம்.
  • மாலதியான் 50% EC @ 1 மிலி / லிட்டர் கலவை கொண்டு நடவுக்கு முன் விதைக் கரணைகளை 15 நிமிடங்கள் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • நீமசால் (15000PPM) 2 மிலி/ லிட்டர் அல்லது புரோபெனோபாஸ் 50% EC @ 2 மிலி / லிட்டர் மருந்துக் கலவையை ராக்கர் தெளிப்பான் கொண்டு தெளித்து பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது பாதுகாப்பான ஆடைகளை அணிவதோடு தயாரிப்புச் சீட்டில் உள்ளவாறு மருந்தின் அளவு, உபயோகிக்கும் நேரம் மற்றும் அறுவடைக்கு முந்தைய இடைவெளி ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.

அறிவியல் பெயர்கள் > செரோட்டாவேகுனா லானிஜெரா

தகவல் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பொருத்தமான நாடு: இந்தியா

ஆசிரியர்கள்: திருமதி. கிரிஜா
MSSRF
தொலைபேசி: 09486144030 மின்னஞ்சல்: girija123@gmail.com
திருத்தியவர்
Plantwise
தயாரிக்கப்பட்ட இடம் இந்தியா நவம்பர் 2012